க.ச.ட.த.ப.ற | ka.sa.da.tha.pa.ra
அறம் பொருள் இன்பம் ஆட்சி அதிகாரம் அரசியல் அறிவியல் நீர் நிலம் காற்று ஆண் பெண் இயல் இசை நாடகம் வீரம் ஈரம் தீரம் மொழி இனம் தேசம் உலகம் மக்கள் மாக்கள் மதம் பக்தி கடவுள் ஆன்மா உயிர் சிந்தை எண்ணம் செயல் என பல விசயங்கள் சார்ந்த என் வல்லின தேடல் தெளிவு தெரிவு உணர்வு பகிர்வு ...
லேபிள்கள்
- அரசியல் (3)
- இசை (1)
- ஈழ விடுதலை (2)
- ஈழம் (1)
- கவிதை (7)
- சமுதாயம் (1)
- சினிமா (1)
- தமிழ் (2)
- தமிழ் ஈழம் (1)
- வாழ்த்துக்கள் (4)
- வாழ்த்துகள் (2)
- Eelam (1)
- Greetinngs (5)
- Kavithai (2)
- Politics (2)
- Society (1)
- Tamil Kavithai (4)
- Tamil Language (1)
- tamileelam (1)
வியாழன், டிசம்பர் 07, 2023
ஆகையால் நாதக நாகாக்கக் கடவ.
புதன், ஆகஸ்ட் 17, 2022
வரலாற்றுத் துயரங்கள் : சீம ரசினி கொண்ட ராம ராச்சியம்
வரலாற்றுத் துயரங்கள் : சீம ரசினி கொண்ட ராம ராச்சியம்
என் அகத்திற்கும் புறத்திற்கும் உறவான தமிழர்களே, வணக்கம்.
நடந்த கடந்தவார அரசியல் கதைகளை கட்சிகள் பேதமின்றி நானாகிய நாம் எழுதும் இன்னுமொரு வரலாற்றுத்துயரம்.
கலைஞருக்கு ஒரு #பேனா மட்டுமல்ல ஓராயிரம் பேனா கொடுத்தாலும் தகும், அதை அடுத்தவருக்கு பங்கம் இன்றி எங்கு வைத்தாலும் நலமே. இயற்கையின் பொருட்டு இதை எதிர்ப்பவர்களின் கருத்திற்கு இன்னுங்கூடிய மரியாதையை கொடுத்து, தக்க தவிர்ப்பாடுகள் செய்து, அழகிய பேனாக்களை ஆங்காங்கே வைக்க அரசு ஆவன செய்யவேண்டும்.
பொறுப்புணர்வோடு வெறுப்புணர்வு கலந்து வெகுண்டு எழும் தமிழ்த்தேசிய தமிழர்களே, அறிவிலேற்பீர், தான் கொண்ட கொள்கையை தமிழ் எழுத்துக்களால் ஏட்டிலும் நாட்டிலும் சாதித்த ஒருவனுக்கு அடையாளமாக தமிழர்கள் பேனாவை கொடுத்தார்கள் என்பது ஞாயம் மட்டுமல்ல அதுவே அறிவுங்கூட. கலைஞரின் சட்டைப்பையிலிருந்து பேனாவை எடுத்தெழுதி சொருகிவிட்ட @சீமான் பேனாவை வரவேற்று வாழ்த்து சொல்லுவது அரசியல்க் கடமை, வாய்ப்பில்லை என்பது மடமை.
மீண்டும் சீண்டும் அரசியல் பேசும் அசளூருக்கார திரு திரு அவர்களே, நினைவில் கொள்க, தமிழர் நாடு, அறமும் மறமும் திறமும் அணிதிரண்ட அறிவியல்க்காடு. ஆன்மீக அரசியல் என்று ஆசைகாட்டும் அரிதார அழகர்களே, அதிகார அசடுகளே, அநியாயம் செய்யாமல் அப்பாலே போங்களேன் அவார்களின் அடிமைகளே. தமிழர்களின் மீது அன்புகாட்டுவதாக ஆசைகாட்டும் அடிப்படைவாதிகளே, யாரப்பா நீவு, எங்களுக்கு இரக்கங்காட்ட, நாங்கள் இட்டதில் அடுப்பெரிக்கும் நீங்கள் எங்களுக்கு கருணைகாட்டுவதா? வந்தாரை வாழவைப்பதும், விருந்தோம்பலும் தமிழர்களுக்கு பிடித்தமானது என்பதால், இங்கே தட்டில் எதையும் விதைக்கலாம் என்று நினைத்துவிட்டீர்களா, பொட்டில் எதையும் ஏற்கும் கடவுளின் காவலர்களே? ஏனிந்த உண்டவீட்டிற்கு இரண்டகம் செய்யும் இழிபழி, தமிழர்களுக்கு எதேனும் செய்யவேண்டும் என்றால் அரசாங்க்கத்தை ஏமாற்றாமல் வரிக்கட்டுங்கள், அரசு அனுப்பிய சட்டங்களை அடுத்த நிலைக்கு அனுப்பி வையுங்கள், அதுதான் தமிழர்களுக்கான உங்கள் கடமை, மீண்டும் மீண்டும் ஏமாறாதீர்கள், தமிழ் மக்களாகிய நாங்கள் அறிவியல்வாதிகள், ஆகையால் அப்பாலே போங்கள்.
1) அரசியல் என்பது அனைத்துயிரிக்குமான உரிமை, அதை அவையவை பேசலாம், செய்யலாம், பரப்பலாம், ஆனால் அது பொது நன்மைக்கானது, தனிமனித நன்மைக்கானது அல்ல. 2) அரசியலால் அமைக்கப்பட்ட ஒரு ஆட்சியின் கீழ் இயங்கும் அரசும் அதன் அதிகாரமும் அரசியலுக்கு அப்பாற்பட்டது. 3) அரசியல் என்பது மக்களுக்கு இடையே இருக்கும் வேற்றுமை-ஒற்றுமைகளுக்கான கருத்துக்களின் அடிப்படையிலான அறமான ஆபத்தில்லாப்போட்டி வைப்பது. 4) அரசு என்பது மக்களுக்கான நன்மைகளை அன்றைய அறிவியலின்படி செய்து வைப்பது, அன்றைய அரசியலின்படி தள்ளி வைப்பது அல்ல. 5) சட்டம், கோட்டை, அரசு, அதிகாரம், அலுவலகம், அதிகாரிகள் போன்றோர் அரசியலில் ஈடுபடக்கூடாது என்பது அவரவருக்கான அரசியல் கருத்துகளின் அடிப்படையில், அவரவர் அரசு அதிகாரத்தை செலுத்திவிடக்கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கையான தடுப்பே ஆகும்.
இரு அசளூரு ஆன்மீக சனாதன சங்கிகளின் தமிழர்களின்மீதான பரிவுகொண்ட அரசியல் சந்திப்பை, அரசியல், அரசு, அதிகாரம் இதுஇதுவென முழுமையான புரிதல் இருந்தும், தமிழர்களின் மீது ஊற்றப்படும் விளக்கெண்ணையை, மானமும் வீரமும் கொண்ட #நாம்தமிழர்கட்சி விவேகமாக "அரசியல் பேசுவது அனைவரின் உரிமை என ஆதரிப்பது" அனாவசியமானது, ஆபத்தானது. ஆகையால், இங்கே, பேசிய அரசியல் விவரம் கேட்பதே நுனிய விவேகம், அதை வினாவி வெடிக்கும் எதிர்க்கேள்வி கேட்பதே புரட்சி அரசியல்.
பெரியாரின் சிலையை உடைக்க வந்த சிரிப்புச் சண்டை நடிகரே, பார்த்தாலே தீட்டு என பக்குவம் செய்துவைத்த மதத்தின் அரசியலில் மலிந்துவிட்ட மானத்தமிழரே, மனமிருக்கா ஓய் உமக்கு? நீவிர் எழுந்துவிடக்கூடாது என சதி செய்த சாதிய இழிவுகளைக் கொண்டஒரு மதத்தின் எழுச்சிக்கு அறியாமல் தெரியாமல் புரியாமல், அம்மதத்தின் ஒரங்களில் உரங்கிக்கொண்டிருக்கும் உன்னை எழுப்பும் பெரியாரின் சிலையை, எழுந்து வந்து எட்டி உதைக்கிறீரே, நீ விர் எந்த வாதி? கடவுள் என்று ஒன்று இல்லை என்பது நிகழ்கால மானுட அறிவு, அதை அடுத்தவருக்கும் சொல்லி வைப்பது மானுடக் கடமை, அதை அன்று பெரியார் செய்தார், அம்மானுடக் கடமையை இன்றும் அவர் சிலை தொடர்கிறது, நீயும் செய், உன் மானுடக் கடமையை. அறிக, பெரியார் சிலையும் தொடுபவன் தலையும் ஒரே தன்மை பெரும்.
கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளை பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்கியவன் காட்டுமிராண்டி, கடவுளை மற, மனிதனை நினை!
மக்களை நினைக்காமல், மாநிலங்களின் உரிமைகளை ஒவ்வொன்றாய் உருவிக்கொண்டிருக்கும் ஒன்றிய அரசின் அடிவருடிகளாக ஊருக்கு உழைக்கும் உரிமைத் தமிழர்களே, உங்களுக்கு எப்படிச் சொன்னால் எகிரும் என்று தெரியவில்லை. ஒரு கல் தொலைவில் மக்களுடன் தொடர்பிலிருக்கும் ஒரு மாநில அரசிடமிருக்கும் மக்கள் நலவள அதிகாரங்களை ஓராயிரம் கல் தாண்டி இருக்கும் ஓர் ஒன்றியத் தூர அரசு பிடுங்கிக்கொண்டால், அங்கே உட்கார வரும் ஒழுங்கற்ற ஒரு ஊதியக்காரர் அதை ஒருவேலை தவறாகப் பயண்படுத்தினால், ஒற்றைப்புள்ளித் தோல்வி வந்தால் ஒன்றியமே நாசமாகும் மனகன நிலை வரும் என்ற இயற்பியல் தத்துவத்தை என்ன செயவது? அதிகாரக் குவியல் ஆபத்து என்பது உங்கள் அறிவியலில் இல்லையா, அடங்கி வாழச்சொல்லும் ஒரு அரசியல் நாட்டிற்கு கோடா? மின்சார வினியோகத்தையும் விற்கத்துடிக்கும் விற்பனையாளர்களே, பொது வீதியையும் விற்று விட்டு, பிறகு காலார நடக்க எங்கே போவீர்கள், கல்லரைக்கா? அரசுகளும் அதிகாரமும் புதிய புதிய வளர்ச்சிகளை கட்டியமைக்க, இருக்கும் கோவணத்தையும் வித்துப் பறக்க அல்ல. ஆகையால், நல்ல புத்தி கண்டு போவீர்.
தவிர, தாய் நாட்டில் பொழிந்த மழைகள், பதறிய அணைகள், கழண்ட மதகுகள், ஓடிவந்த வெள்ளம், கரைபுரண்ட காவேறி, தரைபுரண்ட தமிழர் சதுரங்கம், ஒளி ஒலித்த ஒப்பில்லாத் தமிழர் வரலாறு, சிக்கி முக்கி சிரிக்க வைத்த திருக்குறள், எல்லாம் இனித்தன, என்னையும் பணித்தன.
மும்மாரி பொழிய,
முழுநிலமும் செழிக்க,
வாழ்த்துகளும்,
வாஞ்சைகளும்.
--
சாவண்ணா மகேந்திரன்.