இன்று நண்பர்களுக்கும், இந்திய குடிமக்களுக்கு 62-வது சுதந்திரநாள் வாழ்த்துகள் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.
ஆடு, மாடுகள் முதல் ஆண்டவன் படைத்ததாக கருதப்படும் அத்துனை உயிர்களும் சுதந்திரமான வாழ்க்கையையே வேண்டி விரும்புகின்றன. தனி நாடு கோரிக்கைகள் மட்டுமல்ல தனி வீடு, தனி குடித்தனம், தனி அறை போன்ற குடும்பவியல் கோரிக்கைகளும் சுதந்திரத்தை மையமாகக்கொண்டதே. உயிர்கள் பேணும் அத்தகைய உண்ணதமான சுதந்திரத்தை நமக்காக வருந்தி வாங்கிக்கொடுத்த தியாகச்செம்மல்களுக்கு இந்நாளில் தலைதாழ்த்தி நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறோம். முன்னோர் நமக்கருளிய இச்சுதந்திரத்தை இந்நாளைப்போல் எந்நாளும் கொண்டாடுவோமாக, பேணுவோமாக.
வியாபாரியாக வந்த மேற்குலக கொக்குகள் இருக்க இடம் கேட்டு, பின்பு கால்நீட்டி படுத்து, விலையாகிப்போன ராஜாக்களை ம-குடிப்பாம்பாக அடக்கி, நம்மிலேயே பிறந்த எத்தர்களை எளியவர்களின் எஜமானர்களாக்கி, அடிவருடிகளை அகங்கரம்மிக்க ஆண்டேகளாக்கி, ஜாதிவெறி பிடித்த ஜமின்களாக்கி, உழைக்கும் வாரிசுகளை ஊமைகளாக்கி, அவர்தம் உழைப்பை அட்டையென உறிஞ்சி உறிஞ்சி சுகபோக வாழ்க்கை வாழ்ந்த அந்த வேற்றுலக பிராணிகளை கத்தியின்றி ரத்தமின்றி விரட்ட விவேகமாக மிதவாதத்தை கையிலெடுத்த காந்திபுரத்தாரும், இரத்தம் குடிக்கும் அட்டைகளுகென்ன இரத்த தானமென சித்தம் தெளிந்த சுபாஷ், எதிரி ஏந்திய அதே கருவியேந்தி தீவிரவாதி என இகழப்பட்டு சில தலை எடுத்து, பல தலை கொடுத்து, விடுதலை வேட்கையோடு போராடி, ஒருவழியாய் பழம்தின்று கொட்டை சப்பிக்கொண்டிருந்த வெள்ளை கிழங்கள், மிச்சத்தை சுதந்திரமென காந்தியார் கையில்கொடுத்து காணாமல்போன 1947 ஆகஸ்ட் 15-ஆம் நாள்முதல் இந்நாள்வரை, சுதந்திரநாளன்று குழந்தைகள் "ஜன கண மன" பாடிமுடிக்கும்போது மொழி புரியாவிட்டாலும் நெகிழ்ந்து, கண்ணீர்முட்ட, புல்லரிக்க தன்னிச்சையாக எழுந்து "ஜய ஜய ஜெயகே" என நாமும் பாடிமுடிக்கிறோம்.
காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்பதைப்போல் அவரவர் நாட்டிற்கு அவரவர் சுதந்திரநாள் உணர்சிபொங்கும் ஒரு உன்னத திருநாளே, அத்தகைய நம் இந்திய சுதந்திரநாளை கொண்டாடும் அதே வேளையில், தெற்காசிய வல்லாதிக்க இசை நாற்காலி போட்டியில் இலங்கையில் அமர்வதற்கும் , பழைய பகை தீர்ப்பதற்கும், இலங்கை இனவெறி ராணுவத்தின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமான, நம் தாய்மொழி தமிழ் பேசும் ஈழத்தமிழ் இரத்த உறவுகளின், சுதந்திர மீட்டெடுப்பு போராட்டத்தை, முன்னெடுத்துச்சென்ற தமிழீல விடுதலை புலிகளின் யுக்திகளை, இலங்கை இனவெறி ராணுவத்திற்கு ரேடார் மூலம் காட்டிக்கொடுத்து, இன்னும் பல கொலைக்கருவிகள் அவர் வாங்கிகுவிக்க பல்லாயிரம் கோடி ரூபாய்களை அள்ளிக்கொடுத்து, நமது வரிப்பானத்திலேயே நம் இரத்த உறவுகளுக்கு வலைபின்னி, பல்லாயிரம் தமிழர்களை கொலை செய்து, அவர்தம் விடுதலை போராட்டத்தை அடியோடு அழித்து, மூன்று லட்சம் தமிழர்களை முள்வேலிக்குள் அடைத்து, அடிமைப்படுத்தி, இன்று தனது 62-வது சுதந்திரநாளை வெகு விமர்சையாக கொண்டாடும் எனது இந்திய திருநாட்டை நினைக்கும்போது நம் நெஞ்சு பதறுவதும் நிதர்சனமே.
தன் நாட்டு மக்களின் பாதுகாப்பான, சுகமான வாழ்கையின் பொருட்டு, மாற்றானின் சுதந்திரத்தை களவாடிய கீழான செயலை செய்த ஒரு நாட்டின் குடிமகனாக இந்தநாளில் சிறுமை அடைகிறேன். அத்தகைய வாழ்க்கை பழக்கமில்லை எம் முன்னோருக்கு. நம் மறத்தமிழன் மானத்தையும், அதற்கு பொருந்தும் இந்தியத்தையும் தலைகொடுத்தேனும் அல்லது வழி தவறும் வலியோரின் தலைஎடுத்தேனும் காப்போமாக.
ஈழத்தமிழர் மட்டுமல்ல இன்னும் பல இனங்கள் இப்பூமிப்பந்தில் ஏதேனும் ஒரு வகையில் அடிமைப்பட்டுத்தான் கிடக்கின்றன, அவர்தம் அடிமைத்தலை நீக்கி விரைவில் வெளிச்சம் கண்பார்களாக, நாம் அவர்தம் விடுதலையை ஆமோதிக்கும் மனம் பெறுவோமாக.
சுதந்திரம், ஒவ்வொரு உயிரின் பிறப்புரிமை.
மறுப்பதும், தடுப்பதும் உயிரியளுக்கெதிரான குற்றங்கள்.
நம் சுகத்தைவிட, மாற்றானின் சுதந்திரம் முக்கியமானது.
கருத்தில்லேற்போமாக, கவனம்கொள்வோமாக.
இந்தநாள் போல் எந்தநாளும் போற்றுவோம் சுதந்திரத்தை பேணுவோம் மனிதத்தை.
வாழ்க இந்திய சுதந்திரம்.
--
சாவண்ணா மகேந்திரன்.
அறம் பொருள் இன்பம் ஆட்சி அதிகாரம் அரசியல் அறிவியல் நீர் நிலம் காற்று ஆண் பெண் இயல் இசை நாடகம் வீரம் ஈரம் தீரம் மொழி இனம் தேசம் உலகம் மக்கள் மாக்கள் மதம் பக்தி கடவுள் ஆன்மா உயிர் சிந்தை எண்ணம் செயல் என பல விசயங்கள் சார்ந்த என் வல்லின தேடல் தெளிவு தெரிவு உணர்வு பகிர்வு ...
லேபிள்கள்
- அரசியல் (3)
- இசை (1)
- ஈழ விடுதலை (2)
- ஈழம் (1)
- கவிதை (7)
- சமுதாயம் (1)
- சினிமா (1)
- தமிழ் (2)
- தமிழ் ஈழம் (1)
- வாழ்த்துக்கள் (4)
- வாழ்த்துகள் (2)
- Eelam (1)
- Greetinngs (5)
- Kavithai (2)
- Politics (2)
- Society (1)
- Tamil Kavithai (4)
- Tamil Language (1)
- tamileelam (1)
Greetinngs லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Greetinngs லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, ஆகஸ்ட் 15, 2009
ஞாயிறு, பிப்ரவரி 22, 2009
தரணி புகழும் தமிழன்
தமிழிசை கலைஞன் எ.ஆர்.ரகுமான் இன்று வான்புகழ் கொண்டான், தமிழன் வானுயர்ந்தான். பட்டயம் வாங்கியன் பாடிமுடிதான் ஓர் வரியில், "எல்லா புகழும் இறைவனுக்கே". சொல்லி அடித்தான் சொக்கும் தமிழில், சொர்க்கம் சேர்ந்தது எம் இதயம். உலக அரங்கில் ஓங்கி ஒரைதான் ஒரு உண்மை தமிழன், எல்லா புகழும் இறைவனுகென்று. வாழ்க அவன் தமிழுணர்வு, வளர்க அவன் புகழ்.
ஆஸ்கர் வென்றான் அருமை தமிழன், அசைந்து போனது எம்மிதயம்.
வெற்றிகள் பல அவன் குவிப்பான், வேங்கை தமிழ் அவன் புகழ்வான்
--
சாவண்ணா மகேந்திரன்.
ஆஸ்கர் வென்றான் அருமை தமிழன், அசைந்து போனது எம்மிதயம்.
வெற்றிகள் பல அவன் குவிப்பான், வேங்கை தமிழ் அவன் புகழ்வான்
--
சாவண்ணா மகேந்திரன்.
புதன், டிசம்பர் 31, 2008
புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
புதிய ஆண்டு பிறப்புக்கள் நாம் கொண்டாட, சுயதிரனாய்வு செய்துகொள்ள, பழையன கழிக்க , புதியன புகுத்த, மேம்பாடுகள் திட்டமிட என அவரவர் தேவைக்கேற்றபடி பல வாழ்வியல் மாற்றங்களை செய்துகொள்ள வளர்ந்துவந்த நாகரீகம் நமக்களித்த பரிசு. சான்றோருக்கு இதுபோன்ற சாக்குபோக்குகள் தேவையில்லைதான், எனினும் சாமானியர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பே அவர்தம் வாழ்வை வரையறுக்க. அத்தகைய இத்திருநாளில் நலம்பேணும் சிலபல நற்கொள்கைகளை நாம் நாடியேர்ப்போமாக.
பன்னிரண்டு மாதங்கள் கழித்து வாய்க்கும் இவ்வாய்ப்புக்கள் இன்னும் குறுகிய காலங்களில் கிடைக்குமானால் வாழ்வியல் திருத்தங்கள் இன்னும் திரன்மிக்கதாய் அமையும் என்பது நமது கருத்தாகும். இருப்பினும் அறுபது மதங்கள் கழித்தே கிடைக்கும் அரசியல்மாற்ற வாய்ப்பு போன்ற அவல நிலை இதற்கில்லை என நாம் ஆருதலடைகிறோம் . இனிவரும் புதிய ஆண்டுகளும், அதுபடைக்கும் புதிய தலைமுறைகளும் இந்நிலையை திறனாய்வு செய்வார்களாக.
2008- ஆம் ஆண்டு சிறப்பானதாக கருதி அது 366 நாட்கள் மற்றும் 1 வினாடி துளிகளாக கணக்கிடப்பட்டு உலக பொது கடிகாரங்களும் சரிசெய்யபட்டுவிட்டன. பூமிப்பந்தின் வேகம் குறைந்துவிட்டதெனவும், இதுதொடர்ந்து எதிர்கால சந்ததியினர் நடுநிசியில் சூரியன் பார்ப்பார் எனவும், எதிர்காலநலன் நேக்கிய இம்மாற்றத்தின் தேவையை அறிவியல் ஆராந்து தெரிவித்துள்ளது. இது காலத்தின் கட்டாயம், வழிவிடவேன்டியது நம் பொறுப்பு. 2009- ஆம் ஆண்டும் பெருந்தன்மையுடன் ஒரு வினாடியை 2008- ஆம் ஆண்டிற்கு விட்டுக்கொடுத்திருக்கிறது. நாமும் இந்த நற்பண்பை பெறுவோமாக.
நம்மை புதுப்பிக்கும் இப்புத்தாண்டு தம்மையும் புதுப்பிக்குமாக, இதை செவியேற்குமாக....
போர்கோலம் பூண்டிருக்கும் இந்த பூவுலகில்
புதுக்கோலம் வரைவாயா புத்தாண்டே
அலங்கோலம் அடைந்திருக்கும் எம்மக்கள்
தனிநிலங்கான உரைப்பாய புத்தாண்டே
கடுங்காவல் பெறுகின்ற எம்தொண்டர்
விடுங்காலம் விரைவாக தருவாயா
நெடுங்காலம் சேர்ந்திருந்த என்நாடு
ஒருக்காலும் உடையாமல் தடுப்பாய
களம்பல திருடும் கயவர்தம்மை
நிலம்தின்ன விரைவில் கொடுப்பாயா
யுகம்பல கடந்த எம்மொழி - புது
திறம்பல பெற அருள் புரிவாயா
தடம்பல பெற்ற எம்வரலாறு - உலகின்
இடம்வலம் பெருக ஏற்பாயா
குணம்பல குறுகிய என்நாட்டு
சனம்சில திருந்திட புலன் தருவாயா
பணம்பல பெருகிய மனிதர்தம்
மனம்தர மலரச்செய்வாயா
திடம்பல உறைந்த எந்நெஞ்சில்
மடம்சில மறைய எரிப்பாயா
சினம்பல எரியும் என்சிந்தையில்
உரம்பல விதைத்து வளர்ப்பாயா

புத்தாண்டே.
இப்புத்தாண்டில் உருதிபல நீர் ஏற்று, சுருதி மாறாமல் நிறைவேற்றி, தகுதிபல வளர்த்துக்கொள்ள வாழ்த்தி விடைபெறுகிறோம்.
எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
---
சாவண்ணா மகேந்திரன்
இப்புத்தாண்டில் உருதிபல நீர் ஏற்று, சுருதி மாறாமல் நிறைவேற்றி, தகுதிபல வளர்த்துக்கொள்ள வாழ்த்தி விடைபெறுகிறோம்.
எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
---
சாவண்ணா மகேந்திரன்
வியாழன், டிசம்பர் 25, 2008
இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துகள்...
ஆதாம் தொடங்கிய அத்துனை மனித பாவங்களையும் தனது ரத்தத்தால் கழுவியதாக கூறப்படும் எல்லாம்வல்ல இயேசுபிரான் பிறந்து இன்றோடு 2008 வருடங்கள் முடிவடைந்துவிட்டன. 2009 ம் ஆண்டிலும் அவர்தம் ரத்தத்தின் தேவை இப்பூவுலகில் நிலைபெறும் என்பதே தின்னம். மனிதன் பாவம் செய்யும் பிரானியாகவே படைக்கப்படுகிறான் அல்லது பார்க்கப்படுகிறான். கடவுளர்களின் தலையாய கடமை மன்னிப்புக்களை வாரி வழங்குவதை தவிர வேறெதுவும் இருப்பதாக எமக்கு அவர் இதுவரையிலும் தெளிவுபடுத்தியதுமில்லை. மன்னிப்பது இயேசுவுக்கு மட்டும் பிடித்த வேலையல்ல, அது அல்லாவுக்கும், அனைத்து இந்து கடவுள்களுக்கும், ஏனைய பிற உலக கடவுளர்களுக்கும் பிடித்த வேலையாகத்தான் நாம் அறிவோம்; பிடித்த வேலை என்பதைவிட எளிதான வேலை எனக்கூருவது தகும். எமது அகக்கண்ணில் இது கடவுள்களின் திறமையின்மையாகவே பிரதிபலிக்கிறது, அதுவே உண்மை. மாற்றுச்சிந்தனையில், கடவுளை நாம் அந்தலவு குறைத்து மதிப்பிடவில்லை, அதனால்தான் நாம் உறுதி செய்கிறோம் இது கடவுளின் வேலையன்றென்று.
நம்மை பொருத்தவரை, உழைத்துப் பிழைப்பவனுக்கு கடவுளும் கழுதைச்சானியும் ஒன்றே.
எமக்கு கடவுளருளிய நான்கைந்து வாய்ப்புக்களில் நாம் சிலபல நன்மைகளை கிருஸ்தவர்களாக இருப்பதால் இருப்பவர்கள் பெறக்கண்டேம். அதனடிப்படையில் நாம் கிருஸ்துவ அமைப்புகளை வாழ்த்தி வணங்குகிறேம், அவர்சேவை தொடர வழிசெய்வோம் - அதே நேரத்தில் நாமறிந்த சில வாய்கொழுப்பெடுத்த கிருஸ்தவ அமைப்புக்களுக்காக வருந்துகிறோம், வன்மையாகவும் கண்டிக்கிறோம். கிருஸ்த அமைப்புகளைப்போல், கடவுளிலிருந்து மனிதனை நேக்கி செயல்படும் சக்திகள், மற்ற மத அமைப்புக்களில் மிகவும் அறிதே என்பதும் தின்னம். இதுபற்றி சங்கராச்சாரியார்களும், தமிழக அத்வானிகளும் கவலைபட்டிருப்பின், கோவிலில் ஆடு வெட்ட தடைச்சட்டம், மதமாற்ற தடைச்சட்டம், போன்ற அவமானங்கள் அறங்கேற்றப்பட்டிருக்காது, தேவையும் இருந்திருக்காது என்பதே நமது ஆதங்கம். இனிவரும் காலங்களிலேனும் இம்மடங்களுக்கு உண்மை விளங்குமென நம்பிக்கையாக துயில்கொள்வோம்.
அதேபோல் 'சுகமளிக்கும் கூட்டங்கள் நடத்தி' பணம் கானும் தினகரபாலர்கள் பொது மருத்துவமனைகளை ஆக்கிரமிப்பார்களாக. செவிரர் பார்த்தார், குருடர் நடந்தார் என குழப்பி அய்யோக்கிதனத்தின் மூலம் ஆள் சேர்க்க நினைக்கும் இவர்தம் கருவில் எது கலந்ததாக நாம் நினைக்க?. இருப்பினும் அவர்தம் உரையில் அவ்வப்போது நன்னெறிகளை நான்கெளுத்தும் படிக்காத எம் சொந்தக்களுக்கு சொல்லிக்கொடுத்தால் அவர்தம் ஆத்மாக்கள் அமைதி பெருமாக.
இப்படியாக எம்முள் கொதிக்கும் பல முரண்பட்ட சிந்தனைகளோடு இந்தவருட கிருஸ்துமஸ் வழிபாட்டிலும் குடும்பத்துடன் கலந்துகொண்டோம், அங்கேயும் ஆண்டவனிடம் பலர் தன்மானமற்று பெருமையுடன் பிச்சையெடுக்க கண்டோம்...
நெஞ்சு பொருக்கிதில்லையே...
என்று தனியும் இந்த தாகம்....
போன்ற பாரதியின் பாடல்கள் 'customized remix'-ஆக நம் மண்டைக்குள் ஒலிக்க, அங்கேயும் வாழ்த்தியதைபோல் உங்களுக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துகளை கூறி விடைபெறுகிறோம்...
இயேசு. தனது பிறந்த நாளான இன்று உருதியேற்று உங்களையும், உலகத்தையும் காப்பாராக!

திங்கள், அக்டோபர் 27, 2008
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
உறவுகளே, என் உணர்வுகளே
உங்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
பல்வேறு அலுவல்களிடையே, மனிதனை அவ்வப்போது ஆசுவாசபடுத்துவது இதுபோன்ற கொண்டாட்டங்கள்தான். அதற்கென் நன்றி அவைகளுக்கு.
குடும்பத்தோடுறவாட காரணங்கள் தேவையாகிபோன இக்காலகட்டத்தில், இந்த நல்ல வாய்ப்பை வழங்கிய இத்தீபாவளி பண்டிகைக்காரணங்களை மதியிற்கொள்வது தேவைதானா என்ற விணாக்களுகிடையில், தீபாவளி இனிப்பு-காரங்களோடு நான் கற்ற காரணங்களையும் பகிர்ந்தாய்கிறேன்...
இக்கரணங்களோடும், என்னசல்களோடும் மானசீகமான வாழ்த்துகளை, குடும்பத்தோடு நீர்கொண்டாடும் உம் தீபாவளிக்கு சமர்ப்பிக்கிறேன்.
மீண்டும், என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

- இந்தியப்பெரும்பண்மை கூறுவது கிருஷ்ணர் நரகாசூரன் என்ற அசுரர் இனத்தவரை கொன்று, வெற்றிவாகை சூடி, மக்களை காப்பாற்றிய நன்நாள். மக்க்ள் கொண்டாடிய அந்நாள்தான் தீபாவளி (அஃது, தீவாளி)
- தமிழ்கூறும் நல்லுலகில், அது தீபம்+ஒளி என்று பிரித்து பொருள்படப்பட வேண்டுமென்றாகிறது. வருமையில் (இருளில்) மூழ்கியிருந்து, இக்கார்காலதின் தொடக்க மழையால் விவசாயம் (ஒளி) ஆரம்பமாகும் இக்காலகட்டத்தை குறிப்பால் தீபஒளியேற்றி கொண்டாடப்படுதால் இது தீபவொளி திருநாள் என்றழைக்கப்பட்டு, பின்பு திரிந்து, தீபாவளியாகிப்போனது என்கிறதது.
இதில் தமிழ்கூறும் தீபவொளி காரணம் நமக்கு ஏற்றுக்கொள்ளதாகும்பொழுது, நரகாசூர காரணத்தை நான் ஆராய்ந்திட விளைந்தேன்...
- அசுரனனோ கிருக்கனோ, ஒருவன் இறந்த நாளையா நாம் இவ்விமர்சையா கொண்டாட வேண்டும் என்ற கேள்வி நம்மைநெஞ்சை நிறுத்தத்தான் செய்கிறது.
- இந்துமதம் குறுங்/நெடுங் கதைகளாளும், ஒப்பனை உருவங்களாளும் சாதாரன மூளைக்கும் எட்டும்படி நன்நெறிகளை விளக்குவதாக விவேகானந்தர் தன் அமெரிக்க உரையில் விவரித்துள்ளார். அதன்படியினும், கெட்டவைகளை/இருளை அழித்து நல்லவைக்கும்/வெளிச்சத்திற்கும் கொணர்ந்தார் கிருஷ்ணர் என விளக்கினாலும், இதை தீமை ஒழிந்தநாள் என்று எதிர்முறையில் கூறுவதைவிட, நன்மை பிறந்தநாள் என்று உடன்பாட்டுமுறையில் கூறின் பெருமைகூடுமென்பது நம் கூற்று. நம் நெஞ்சும் குறுகுறுக்காது.
- தீபாவளி தமிழினபெருநாளல்ல அது ஆரியப்பெருநாள், ஆரிய அடிவருடிகளால் அது தமிழினதிற்குள்ளும் புகுத்தப்பட்டதெனவும், நரகாசூர அசுரர்/இராக்கதர் வகையென தமிழினத்தைதான் ஆரியர்கள் குறிப்பிட்டதாகவும், அதற்கு தமிழினத்தை அவரில் ஒருபுரத்தார் "இராக்கதர்" என்றழைத்த அச்சொல்லே சாட்சி எனவும் பாரதிதாசன் வெகுண்டெழுந்துள்ளார்.
வரலாறு எப்படியிருபினும், மக்கள் விரும்பி கொண்டாடும் இம்மாநாளை நாம் வரவேற்கிறேம்...இதனால் நிகழும் பொருளாதார நகர்வுகளை நாம் விரும்புகிறேம்...
வரலாறு கோளாராயினும்,
வம்பில்லாதவரை வரவேற்போம் வாழ்நாள்வரை, வந்தவரை வாழவைப்போம் வம்பு இல்லாததுவரை. |
இக்கரணங்களோடும், என்னசல்களோடும் மானசீகமான வாழ்த்துகளை, குடும்பத்தோடு நீர்கொண்டாடும் உம் தீபாவளிக்கு சமர்ப்பிக்கிறேன்.
மீண்டும், என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
--
சாவண்ணா மகேந்திரன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)