திங்கள், அக்டோபர் 27, 2008

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

உறவுகளே, என் உணர்வுகளே

உங்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

பல்வேறு அலுவல்களிடையே, மனிதனை அவ்வப்போது ஆசுவாசபடுத்துவது இதுபோன்ற கொண்டாட்டங்கள்தான். அதற்கென் நன்றி அவைகளுக்கு.

குடும்பத்தோடுறவாட காரணங்கள் தேவையாகிபோன இக்காலகட்டத்தில், இந்த நல்ல வாய்ப்பை வழங்கிய இத்தீபாவளி பண்டிகைக்காரணங்களை மதியிற்கொள்வது தேவைதானா என்ற விணாக்களுகிடையில், தீபாவளி இனிப்பு-காரங்களோடு நான் கற்ற காரணங்களையும் பகிர்ந்தாய்கிறேன்...


  1. இந்தியப்பெரும்பண்மை கூறுவது கிருஷ்ணர் நரகாசூரன் என்ற அசுரர் இனத்தவரை கொன்று, வெற்றிவாகை சூடி, மக்களை காப்பாற்றிய நன்நாள். மக்க்ள் கொண்டாடிய அந்நாள்தான் தீபாவளி (அஃது, தீவாளி)
  2. தமிழ்கூறும் நல்லுலகில், அது தீபம்+ஒளி என்று பிரித்து பொருள்படப்பட வேண்டுமென்றாகிறது. வருமையில் (இருளில்) மூழ்கியிருந்து, இக்கார்காலதின் தொடக்க மழையால் விவசாயம் (ஒளி) ஆரம்பமாகும் இக்காலகட்டத்தை குறிப்பால் தீபஒளியேற்றி கொண்டாடப்படுதால் இது தீபவொளி திருநாள் என்றழைக்கப்பட்டு, பின்பு திரிந்து, தீபாவளியாகிப்போனது என்கிறதது.

இதில் தமிழ்கூறும் தீபவொளி காரணம் நமக்கு ஏற்றுக்கொள்ளதாகும்பொழுது, நரகாசூர காரணத்தை நான் ஆராய்ந்திட விளைந்தேன்...

  1. அசுரனனோ கிருக்கனோ, ஒருவன் இறந்த நாளையா நாம் இவ்விமர்சையா கொண்டாட வேண்டும் என்ற கேள்வி நம்மைநெஞ்சை நிறுத்தத்தான் செய்கிறது.
  2. இந்துமதம் குறுங்/நெடுங் கதைகளாளும், ஒப்பனை உருவங்களாளும் சாதாரன மூளைக்கும் எட்டும்படி நன்நெறிகளை விளக்குவதாக விவேகானந்தர் தன் அமெரிக்க உரையில் விவரித்துள்ளார். அதன்படியினும், கெட்டவைகளை/இருளை அழித்து நல்லவைக்கும்/வெளிச்சத்திற்கும் கொணர்ந்தார் கிருஷ்ணர் என விளக்கினாலும், இதை தீமை ஒழிந்தநாள் என்று எதிர்முறையில் கூறுவதைவிட, நன்மை பிறந்தநாள் என்று உடன்பாட்டுமுறையில் கூறின் பெருமைகூடுமென்பது நம் கூற்று. நம் நெஞ்சும் குறுகுறுக்காது.
  3. தீபாவளி தமிழினபெருநாளல்ல அது ஆரியப்பெருநாள், ஆரிய அடிவருடிகளால் அது தமிழினதிற்குள்ளும் புகுத்தப்பட்டதெனவும், நரகாசூர அசுரர்/இராக்கதர் வகையென தமிழினத்தைதான் ஆரியர்கள் குறிப்பிட்டதாகவும், அதற்கு தமிழினத்தை அவரில் ஒருபுரத்தார் "இராக்கதர்" என்றழைத்த அச்சொல்லே சாட்சி எனவும் பாரதிதாசன் வெகுண்டெழுந்துள்ளார்.

வரலாறு எப்படியிருபினும், மக்கள் விரும்பி கொண்டாடும் இம்மாநாளை நாம் வரவேற்கிறேம்...இதனால் நிகழும் பொருளாதார நகர்வுகளை நாம் விரும்புகிறேம்...

வரலாறு கோளாராயினும்,

வம்பில்லாதவரை வரவேற்போம் வாழ்நாள்வரை,

வந்தவரை வாழவைப்போம் வம்பு இல்லாததுவரை.




இக்கரணங்களோடும், என்னசல்களோடும் மானசீகமான வாழ்த்துகளை, குடும்பத்தோடு நீர்கொண்டாடும் உம் தீபாவளிக்கு சமர்ப்பிக்கிறேன்.


மீண்டும், என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
--
சாவண்ணா மகேந்திரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுபற்றிய உங்கள் கருத்தை எனக்கு தெரிவிக்கவும்.