புதன், டிசம்பர் 31, 2008

புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

புதிய ஆண்டு பிறப்புக்கள் நாம் கொண்டாட, சுயதிரனாய்வு செய்துகொள்ள, பழையன கழிக்க , புதியன புகுத்த, மேம்பாடுகள் திட்டமிட என அவரவர் தேவைக்கேற்றபடி பல வாழ்வியல் மாற்றங்களை செய்துகொள்ள வளர்ந்துவந்த நாகரீகம் நமக்களித்த பரிசு. சான்றோருக்கு இதுபோன்ற சாக்குபோக்குகள் தேவையில்லைதான், எனினும் சாமானியர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பே அவர்தம் வாழ்வை வரையறுக்க. அத்தகைய இத்திருநாளில் நலம்பேணும் சிலபல நற்கொள்கைகளை நாம் நாடியேர்ப்போமாக.

பன்னிரண்டு மாதங்கள் கழித்து வாய்க்கும் இவ்வாய்ப்புக்கள் இன்னும் குறுகிய காலங்களில் கிடைக்குமானால் வாழ்வியல் திருத்தங்கள் இன்னும் திரன்மிக்கதாய் அமையும் என்பது நமது கருத்தாகும். இருப்பினும் அறுபது மதங்கள் கழித்தே கிடைக்கும் அரசியல்மாற்ற வாய்ப்பு போன்ற அவல நிலை இதற்கில்லை என நாம் ஆருதலடைகிறோம் . இனிவரும் புதிய ஆண்டுகளும், அதுபடைக்கும் புதிய தலைமுறைகளும் இந்நிலையை திறனாய்வு செய்வார்களாக.

2008- ஆம் ஆண்டு சிறப்பானதாக கருதி அது 366 நாட்கள் மற்றும் 1 வினாடி துளிகளாக கணக்கிடப்பட்டு உலக பொது கடிகாரங்களும் சரிசெய்யபட்டுவிட்டன. பூமிப்பந்தின் வேகம் குறைந்துவிட்டதெனவும், இதுதொடர்ந்து எதிர்கால சந்ததியினர் நடுநிசியில் சூரியன் பார்ப்பார் எனவும், எதிர்காலநலன் நேக்கிய இம்மாற்றத்தின் தேவையை அறிவியல் ஆராந்து தெரிவித்துள்ளது. இது காலத்தின் கட்டாயம், வழிவிடவேன்டியது நம் பொறுப்பு. 2009- ஆம் ஆண்டும் பெருந்தன்மையுடன் ஒரு வினாடியை 2008- ஆம் ஆண்டிற்கு விட்டுக்கொடுத்திருக்கிறது. நாமும் இந்த நற்பண்பை பெறுவோமாக.

நம்மை புதுப்பிக்கும் இப்புத்தாண்டு தம்மையும் புதுப்பிக்குமாக, இதை செவியேற்குமாக....

போர்கோலம் பூண்டிருக்கும் இந்த பூவுலகில்
புதுக்கோலம் வரைவாயா புத்தாண்டே
அலங்கோலம் அடைந்திருக்கும் எம்மக்கள்
தனிநிலங்கான உரைப்பாய புத்தாண்டே
கடுங்காவல் பெறுகின்ற எம்தொண்டர்
விடுங்காலம் விரைவாக தருவாயா
நெடுங்காலம் சேர்ந்திருந்த என்நாடு
ஒருக்காலும் உடையாமல் தடுப்பாய
களம்பல திருடும் கயவர்தம்மை
நிலம்தின்ன விரைவில் கொடுப்பாயா
யுகம்பல கடந்த எம்மொழி - புது
திறம்பல பெற அருள் புரிவாயா
தடம்பல பெற்ற எம்வரலாறு - உலகின்
இடம்வலம் பெருக ஏற்பாயா
குணம்பல குறுகிய என்நாட்டு
சனம்சில திருந்திட புலன் தருவாயா
பணம்பல பெருகிய மனிதர்தம்
மனம்தர மலரச்செய்வாயா
திடம்பல உறைந்த எந்நெஞ்சில்
மடம்சில மறைய எரிப்பாயா
சினம்பல எரியும் என்சிந்தையில்
உரம்பல விதைத்து வளர்ப்பாயா
புத்தாண்டே.

இப்புத்தாண்டில் உருதிபல நீர் ஏற்று, சுருதி மாறாமல் நிறைவேற்றி, தகுதிபல வளர்த்துக்கொள்ள வாழ்த்தி விடைபெறுகிறோம்.

எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
---
சாவண்ணா மகேந்திரன்
வியாழன், டிசம்பர் 25, 2008

இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துகள்...

ஆதாம் தொடங்கிய அத்துனை மனித பாவங்களையும் தனது ரத்தத்தால் கழுவியதாக கூறப்படும் எல்லாம்வல்ல இயேசுபிரான் பிறந்து இன்றோடு 2008 வருடங்கள் முடிவடைந்துவிட்டன. 2009 ம் ஆண்டிலும் அவர்தம் ரத்தத்தின் தேவை இப்பூவுலகில் நிலைபெறும் என்பதே தின்னம். மனிதன் பாவம் செய்யும் பிரானியாகவே படைக்கப்படுகிறான் அல்லது பார்க்கப்படுகிறான். கடவுளர்களின் தலையாய கடமை மன்னிப்புக்களை வாரி வழங்குவதை தவிர வேறெதுவும் இருப்பதாக எமக்கு அவர் இதுவரையிலும் தெளிவுபடுத்தியதுமில்லை. மன்னிப்பது இயேசுவுக்கு மட்டும் பிடித்த வேலையல்ல, அது அல்லாவுக்கும், அனைத்து இந்து கடவுள்களுக்கும், ஏனைய பிற உலக கடவுளர்களுக்கும் பிடித்த வேலையாகத்தான் நாம் அறிவோம்; பிடித்த வேலை என்பதைவிட எளிதான வேலை எனக்கூருவது தகும். எமது அகக்கண்ணில் இது கடவுள்களின் திறமையின்மையாகவே பிரதிபலிக்கிறது, அதுவே உண்மை. மாற்றுச்சிந்தனையில், கடவுளை நாம் அந்தலவு குறைத்து மதிப்பிடவில்லை, அதனால்தான் நாம் உறுதி செய்கிறோம் இது கடவுளின் வேலையன்றென்று.

நம்மை பொருத்தவரை, உழைத்துப் பிழைப்பவனுக்கு கடவுளும் கழுதைச்சானியும் ஒன்றே.

எமக்கு கடவுளருளிய நான்கைந்து வாய்ப்புக்களில் நாம் சிலபல நன்மைகளை கிருஸ்தவர்களாக இருப்பதால் இருப்பவர்கள் பெறக்கண்டேம். அதனடிப்படையில் நாம் கிருஸ்துவ அமைப்புகளை வாழ்த்தி வணங்குகிறேம், அவர்சேவை தொடர வழிசெய்வோம் - அதே நேரத்தில் நாமறிந்த சில வாய்கொழுப்பெடுத்த கிருஸ்தவ அமைப்புக்களுக்காக வருந்துகிறோம், வன்மையாகவும் கண்டிக்கிறோம். கிருஸ்த அமைப்புகளைப்போல், கடவுளிலிருந்து மனிதனை நேக்கி செயல்படும் சக்திகள், மற்ற மத அமைப்புக்களில் மிகவும் அறிதே என்பதும் தின்னம். இதுபற்றி சங்கராச்சாரியார்களும், தமிழக அத்வானிகளும் கவலைபட்டிருப்பின், கோவிலில் ஆடு வெட்ட தடைச்சட்டம், மதமாற்ற தடைச்சட்டம், போன்ற அவமானங்கள் அறங்கேற்றப்பட்டிருக்காது, தேவையும் இருந்திருக்காது என்பதே நமது ஆதங்கம். இனிவரும் காலங்களிலேனும் இம்மடங்களுக்கு உண்மை விளங்குமென நம்பிக்கையாக துயில்கொள்வோம்.

அதேபோல் 'சுகமளிக்கும் கூட்டங்கள் நடத்தி' பணம் கானும் தினகரபாலர்கள் பொது மருத்துவமனைகளை ஆக்கிரமிப்பார்களாக. செவிரர் பார்த்தார், குருடர் நடந்தார் என குழப்பி அய்யோக்கிதனத்தின் மூலம் ஆள் சேர்க்க நினைக்கும் இவர்தம் கருவில் எது கலந்ததாக நாம் நினைக்க?. இருப்பினும் அவர்தம் உரையில் அவ்வப்போது நன்னெறிகளை நான்கெளுத்தும் படிக்காத எம் சொந்தக்களுக்கு சொல்லிக்கொடுத்தால் அவர்தம் ஆத்மாக்கள் அமைதி பெருமாக.

இப்படியாக எம்முள் கொதிக்கும் பல முரண்பட்ட சிந்தனைகளோடு இந்தவருட கிருஸ்துமஸ் வழிபாட்டிலும் குடும்பத்துடன் கலந்துகொண்டோம், அங்கேயும் ஆண்டவனிடம் பலர் தன்மானமற்று பெருமையுடன் பிச்சையெடுக்க கண்டோம்...

நெஞ்சு பொருக்கிதில்லையே...
என்று தனியும் இந்த தாகம்....

போன்ற பாரதியின் பாடல்கள் 'customized remix'-ஆக நம் மண்டைக்குள் ஒலிக்க, அங்கேயும் வாழ்த்தியதைபோல் உங்களுக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துகளை கூறி விடைபெறுகிறோம்...

இயேசு. தனது பிறந்த நாளான இன்று உருதியேற்று உங்களையும், உலகத்தையும் காப்பாராக!

--
சாவண்ணா மகேந்திரன்

வியாழன், நவம்பர் 13, 2008

மழைத்தவளையாய்...

திமிர்
===
நீ விட்டெறிந்ததை
தட்டேந்தாத எனை
திமிர் எனுமோ
உன் திமிர்


சமூக கந்தல்
=========
மூடைமூடையாய் துணியிருந்தும்
எப்போதும் கந்தலுடன்
எம் வண்ணானின் மகள்.

சமத்துவபுர கவி
==============
சமத்துவம் ஓதும் கவிஞன் நான் - அதை
போற்றி தொடுத்தேன் கவிதைஞான்
வந்து விழுந்தன ஒரேவரியில்
கவித்துவமான நல்வார்த்தைகளாய்
மளிகைக்கடை காரரும்
கைவண்டி காரனும்.

ஓர் மனப்பிரளயம்
================
எரியும் பூமி
உருகும் பனிமலை
சரியும் சந்தை
பெருகும் மந்தை
சுருங்கும் நிலம்
நிலத்தை பிரிக்கும் கோடுகள்
அதனால் விளையும் கேடுகள்
மொழியால் பிளவுபடும் தேசியம்
தேசியத்திற்கு பலியாகும் செம்மொழி
ஜாதிசதியால் கிளிபடும் மனிதம்
மனிதனால் வலுப்பெறும் ஜாதிவெறி
மனம் ஒவ்வாத இனகலப்பு
மானம் மழுங்கடிக்கும் நாகரீகம்
ஊரை சுற்றும் சாக்கடை
உயர உயரும் வேலிச்சுவர்
சுற்றி திரியும் சோம்பேறி
சுயநலம் போற்றும் சம்சாரி
சுருட்ட துடிக்கும் வியாபாரி
தன்மானம் இல்லாத அதிகாரி
தரித்திரம் படைக்கும் அரசியல்
சரித்திரம் படைக்கும் விலைவாசி
விவரம் அறியா எம்மக்கள்
விருந்தை விசமாக்கும் எம்தலைவன்
தனித்தே செயல்படும் ஒரே கொள்கை
தமிழரே படிக்காத தமிழ் கொள்கை
......
.......
இதுபோல் பிரச்சினை என்றும் பலபல
இன்னும் அடங்கா இச்சைகள் சிலபல
எதனை எப்படி களைந்தெறிவேன்
எல்லாம்வல்ல நான் முதலில்...

--
சவண்ணா மகேந்திரன்
திங்கள், அக்டோபர் 27, 2008

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

உறவுகளே, என் உணர்வுகளே

உங்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

பல்வேறு அலுவல்களிடையே, மனிதனை அவ்வப்போது ஆசுவாசபடுத்துவது இதுபோன்ற கொண்டாட்டங்கள்தான். அதற்கென் நன்றி அவைகளுக்கு.

குடும்பத்தோடுறவாட காரணங்கள் தேவையாகிபோன இக்காலகட்டத்தில், இந்த நல்ல வாய்ப்பை வழங்கிய இத்தீபாவளி பண்டிகைக்காரணங்களை மதியிற்கொள்வது தேவைதானா என்ற விணாக்களுகிடையில், தீபாவளி இனிப்பு-காரங்களோடு நான் கற்ற காரணங்களையும் பகிர்ந்தாய்கிறேன்...


 1. இந்தியப்பெரும்பண்மை கூறுவது கிருஷ்ணர் நரகாசூரன் என்ற அசுரர் இனத்தவரை கொன்று, வெற்றிவாகை சூடி, மக்களை காப்பாற்றிய நன்நாள். மக்க்ள் கொண்டாடிய அந்நாள்தான் தீபாவளி (அஃது, தீவாளி)
 2. தமிழ்கூறும் நல்லுலகில், அது தீபம்+ஒளி என்று பிரித்து பொருள்படப்பட வேண்டுமென்றாகிறது. வருமையில் (இருளில்) மூழ்கியிருந்து, இக்கார்காலதின் தொடக்க மழையால் விவசாயம் (ஒளி) ஆரம்பமாகும் இக்காலகட்டத்தை குறிப்பால் தீபஒளியேற்றி கொண்டாடப்படுதால் இது தீபவொளி திருநாள் என்றழைக்கப்பட்டு, பின்பு திரிந்து, தீபாவளியாகிப்போனது என்கிறதது.

இதில் தமிழ்கூறும் தீபவொளி காரணம் நமக்கு ஏற்றுக்கொள்ளதாகும்பொழுது, நரகாசூர காரணத்தை நான் ஆராய்ந்திட விளைந்தேன்...

 1. அசுரனனோ கிருக்கனோ, ஒருவன் இறந்த நாளையா நாம் இவ்விமர்சையா கொண்டாட வேண்டும் என்ற கேள்வி நம்மைநெஞ்சை நிறுத்தத்தான் செய்கிறது.
 2. இந்துமதம் குறுங்/நெடுங் கதைகளாளும், ஒப்பனை உருவங்களாளும் சாதாரன மூளைக்கும் எட்டும்படி நன்நெறிகளை விளக்குவதாக விவேகானந்தர் தன் அமெரிக்க உரையில் விவரித்துள்ளார். அதன்படியினும், கெட்டவைகளை/இருளை அழித்து நல்லவைக்கும்/வெளிச்சத்திற்கும் கொணர்ந்தார் கிருஷ்ணர் என விளக்கினாலும், இதை தீமை ஒழிந்தநாள் என்று எதிர்முறையில் கூறுவதைவிட, நன்மை பிறந்தநாள் என்று உடன்பாட்டுமுறையில் கூறின் பெருமைகூடுமென்பது நம் கூற்று. நம் நெஞ்சும் குறுகுறுக்காது.
 3. தீபாவளி தமிழினபெருநாளல்ல அது ஆரியப்பெருநாள், ஆரிய அடிவருடிகளால் அது தமிழினதிற்குள்ளும் புகுத்தப்பட்டதெனவும், நரகாசூர அசுரர்/இராக்கதர் வகையென தமிழினத்தைதான் ஆரியர்கள் குறிப்பிட்டதாகவும், அதற்கு தமிழினத்தை அவரில் ஒருபுரத்தார் "இராக்கதர்" என்றழைத்த அச்சொல்லே சாட்சி எனவும் பாரதிதாசன் வெகுண்டெழுந்துள்ளார்.

வரலாறு எப்படியிருபினும், மக்கள் விரும்பி கொண்டாடும் இம்மாநாளை நாம் வரவேற்கிறேம்...இதனால் நிகழும் பொருளாதார நகர்வுகளை நாம் விரும்புகிறேம்...

வரலாறு கோளாராயினும்,

வம்பில்லாதவரை வரவேற்போம் வாழ்நாள்வரை,

வந்தவரை வாழவைப்போம் வம்பு இல்லாததுவரை.
இக்கரணங்களோடும், என்னசல்களோடும் மானசீகமான வாழ்த்துகளை, குடும்பத்தோடு நீர்கொண்டாடும் உம் தீபாவளிக்கு சமர்ப்பிக்கிறேன்.


மீண்டும், என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
--
சாவண்ணா மகேந்திரன்.

புதன், அக்டோபர் 22, 2008

வஞ்சிக்கப்படும் வல்லினம்

வாழ்வாங்கு வாழ்ந்த, வல்லமை பொருந்திய நம் தமிழினம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது சொந்தங்களே.


 1. இந்தியா-பாகிஸ்தான் போர்களில், இந்தியமக்களை பாதுகாக்க, இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் பேரில், இலங்கை பாகிஸ்தானின் போர் விமானங்களுக்கு உதவாமலிருக்க, இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட 5 லட்சத்திற்கும் மேலான தமிழர்களின் இன்றை நிலையை எவரறிவார். எங்த நாதியும் இல்லாமல் இந்தியாவந்த அந்த தியாக செம்மல்கள் எங்கு செத்துமடிந்தார்களோ?
 2. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை; நம்பி இனைந்த நமை, காரியம் (சுதந்திரம்) முடிந்ததும், வரையபட்ட இந்தியாவெனும் வட்டத்திற்குள் வாழ "இந்தி" கற்க கட்டாயபடுத்தி, மறுத்து போராடிய மானமுள்ள தமிழர்களில் 100-க்கும் மேற்பட்டோரை இந்திய இரனுவத்தின் துப்பக்கிகளுக்கு இறையாக்கியதே அன்றை வஞ்சகதனமான இந்திய அரசு. எவன் செய்வான் இந்த இழிந்தகாரியத்தை? இதையொத்த சுயலாப தந்திரங்களை விழிப்புடன் தடுப்பது நம் பிறப்புரிமை, சமுதாயகடமை. நானும் என் சொந்தங்களும் ஒப்பற்ற என் தாய்மொழியில் உருகமுடியும் பொழுது மாற்றான் தாய்மொழி என்ன மயித்துக்குவே? தேவையுள்ளவன் தேடிக்குவான், திணிக்க எந்த "கோ"மகனுக்கும் உரிமையில்லைவே.
 3. பேருக்குதான் இந்தியன், எந்த பிரச்சினைக்கும் அண்டை மாநிலத்தில் அடிவாங்கி, அவமானபட்டு, கற்பிழந்து கஞ்சி குடிக்கவைத்திருக்கும் இந்த ஈன இந்தியா நமக்கென்ன செய்தது. குறைந்தபட்சம், நதிநீரையாவது முறையாக்க முனைந்ததா? வரிபனத்தாலும், அந்நிய வருவாயாலும் நம்மை உறிஞ்சி வடக்கை வாழ்வைக்குதே தவிற, நம் சொந்தங்கள் இன்னும் நாக்குவழித்துகொண்டுதானே இருக்கிறார்கள். அவலட்சனம் இப்படி கூத்தாட, இந்தி படித்தால் வேலைகிடைக்குமென நயவஞ்சகதனம்வேறு. ஆம், சிப்பந்திகளாகவும், சில்லரைகளாகவும் வடக்கன் கால்துடைக்கும் வேலை நமக்கு நிச்சயம்.
 4. ஆண்டாண்டு காலமாய் தமிழன் ஆளுமையிலிருந்த கச்சத்தீவை, தன் பேடிதனத்தால் (மற்றொரு இந்தியா-பாக்கிஸ்தான் போர், மீண்டும் இலங்கை-பாக்கிஸ்தான் உறவு, மற்றொரு இந்திய--இலங்கை ஒப்பந்தம்) இலங்கையிடம் இழந்த இந்தியா, மீண்டும் மீண்டும் இலங்கை இராணுவத்தால் கச்சத்தீவில் சுட்டுக்கொள்ளப்படும் மீன்வர்களின் உயிர்களை மதிக்கிறதா? மாறாக அந்நாட்டின் பாதுகாப்பிற்கென போர்கருவிகளையும், உக்திகளையும் வழ்ங்கி உற்சாகப்பபடுத்துகிறது. இதுபற்றி மத்திய அரசிடம் நாம் கெஞ்சவேண்டியிருக்கிறது. இதுவரை 320-க்கும் மேற்பட்ட தமிழர்களை (மீனவர்களை) இலங்கை இராணுவம் கொன்றுகுவித்திருக்கிறது. சீரிபாய வேண்டிய இந்திய ஏவுகனைகள் வீரியமற்றுபோய்விட்டிருக்கிறது போன்ற தோற்றம் நமக்கு. 320 தமிழன் உயிர் போனபின்பும், சகலத்தையும் பொத்திக்கொண்டிருக்கிற இந்தியா, ஆப்பிரிக்க கடல்கொள்ளையர்களால் கடத்தப்ட்ட ஒரு இந்தியனை மீட்க போர்க்கப்பலை அனுப்பியுள்ளது, ஏன், அவன் வட்க்கத்தியன் என்பதாலா? இதுவரை போன 320 தமிழனின் உயிர்களுக்கும்/குடும்பத்திற்கும், மீதமுள்ள ஆயிரகணக்கான மீன்வர்கள், அவர்தம் குடும்பத்திற்கு இந்த வீரியமற்ற இந்தியாவின் பதில் என்ன?
நன்பர்களே, பிறநாட்டு தமிழின இன்னல்களை கலையவேண்டாம், உள்நாட்டு தமிழன் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வதைக்கப்படுகிறான், வடக்கன் பொருப்பிலுள்ள இனவாத இந்திய அரசுகள் இந்திய தமிழனை உதாசீனபடுத்தி வஞ்சிக்கிறது.
 1. இங்கிலாந்தில் அவமானப்பட்ட வடக்கத்திய நடிகையின் கண்ணீரை துடைக்க நீண்ட இந்திய வெளிவுரவுத்துறையின் கைகள், இரத்தம் வழியும் தமிழக மீனவனுக்காக நீளாதது ஏன்?
 2. ஆப்பிரிக்க குஜராத்தியற்கு நீண்ட இந்திய வெளிவுரவுத்துறையின் கைகள், தமிழீழ மற்றும் மலேசிய தமிழனுக்கும் நீளாதது ஏன்?
வல்லினமே விழி, உடைவாளாய் உறங்காதே,
தூக்கம் கலை, துக்கம் துற,
இனஉணர்வு கொள், இனவெறி கொல்,
ஒதுங்கி இருந்தது போதும்,
தமிழின உணர்வாளனாய் மாறு,
தாய்தமிழ் போற்று, தமிழினம் காத்திடு,
ஓங்கி உரை, காலத்தை எட்டிப்பார்,
எதிர்கால தமிழனமும் செழிக்கட்டும் - அது,
வரலாற்றில் உன்பெயரை செதுக்கட்டும்."நல்லதோர் வீனைசெய்து, அதை நலங்கெட புழுதியிலெறிவதுண்டோ?" - மகாகவி பாரதி.

--
சாவண்ணா மகேந்திரன்.

புதன், மார்ச் 12, 2008

சும்மா கிடந்த சங்கை எடுத்து.....

நன்பர்களே,அண்மையில் நான் அனுபவித்த சில அவலட்சணங்களை பகிர்கிறேன் இங்கே.*********************************************

மாமதுரை சென்றேன்....

எங்கெங்கு காணினும் போஸ்ட்ரடா

அதில் ஏகமாய் இளிக்கும் வசனமடா

அவை இலகுவாய் பிடிக்குது காக்கையடா

ஆம்.... ஜீரணிக்கமுடியாத வசனங்கள்....சில உம் பார்வைக்கு...

தென்னகத்தின் ஃபிடல் காஸ்ட்ரோவே ........

வாழும் வள்ளுவரே ......

வருங்கால இந்தியாவே ...

இன்னும் எத்தனையோ ஏட்டில் ஏற்ற தகுதியும் நேரமும் அற்ற வசனங்கள்....

இப்படி

காக்காய் பிடிக்கும் கழககாரர்களையும்

வாழ்வதற்கு வாலாட்டும் ஈனர்களையும்

கண்ட கண்ட வார்த்தையில் திட்ட முடியாதால்......

இங்கே இப்படி......

குட்டிச்சுவர் முகர்ந்து ஒடிய நாய் பார்த்து.......

தெருநாய்,

சிறுநீர்கொண்ட சொரிநாய்,

அலைந்தது சுறுசுறுப்புடன்,
மறைத்தது அழைத்தது மொட்டை சுவர்!
நாடியது விறுவிறுப்புடன்.

அங்கே இளித்தது பட்டை வசனம்
படித்தது வெடித்தது,
வெறுத்தது கடுகடுப்புடன்

எங்கே அந்த அண்டை சுவர்?
தேடியது அறுவெறுப்புடன்.

தெருநாய்,
சிறுநெறிகொண்ட மதிநாய்.*********************************************

செத்துகிடந்த கழுதை பார்த்து ..... நினைத்ததுசுவரொட்டி செய்தி

இனிப்பு தடித்த வார்த்தை

இளித்து பிடித்தது காக்கை

களித்து திண்றது கழுதை

வலித்து செத்தது மறுதை

சலித்து சொன்னது கவிதை

ஜீரணமாகவில்லை

சுவரொட்டி செய்தி.


*********************************************

அப்புறமா.... இது வேற.... குமுதம்.காம்-ல ஒரு கவிஞனின் பேட்டி பார்த்து பொத்துக்கொண்டு வந்தது கோபம்....... அவரை பாராட்ட தோண்றியது....

ஒண்னு ரெண்டு கவியெழுதி

ஊறுபட்ட உரையெழுதி - எல்லாம்

இசைகுள்ள சமைஞ்சதாலே

நானும் கவிஞன்னு

நா தடிக்கும் மக்கா...!

கம்பன் முந்திய கவிராயன்கள்

காளி பாரதி கண்ண தாசன்கள்

பட்டு கோட்டை கல்யாண

சுந்தர வாலி வைர முத்துக்ள்

உருதி யேற்ற
அவர்கவி தரும்
சொற்சுவை கூட்டிக்காட்டும் பொருட்சுவை

யாதும் அற்ற
உன்கவி எனும்
நகைச்சுவை கூட்டும் சதைச்சுவை
நாத்தமடிக்குமப்பா...!

*************************************************************************************
சாவண்ணா மகேந்திரன்