அண்மையில் நான் அனுபவித்த சில அவலட்சணங்களை பகிர்கிறேன் இங்கே.
*********************************************
மாமதுரை சென்றேன்....
எங்கெங்கு காணினும் போஸ்ட்ரடா
அதில் ஏகமாய் இளிக்கும் வசனமடா
அவை இலகுவாய் பிடிக்குது காக்கையடா
ஆம்.... ஜீரணிக்கமுடியாத வசனங்கள்....சில உம் பார்வைக்கு...
தென்னகத்தின் ஃபிடல் காஸ்ட்ரோவே ........
வாழும் வள்ளுவரே ......
வருங்கால இந்தியாவே ...
இன்னும் எத்தனையோ ஏட்டில் ஏற்ற தகுதியும் நேரமும் அற்ற வசனங்கள்....
இப்படி
காக்காய் பிடிக்கும் கழககாரர்களையும்
வாழ்வதற்கு வாலாட்டும் ஈனர்களையும்
கண்ட கண்ட வார்த்தையில் திட்ட முடியாதால்......
இங்கே இப்படி......
குட்டிச்சுவர் முகர்ந்து ஒடிய நாய் பார்த்து.......
தெருநாய்,
சிறுநீர்கொண்ட சொரிநாய்,அலைந்தது சுறுசுறுப்புடன்,
மறைத்தது அழைத்தது மொட்டை சுவர்!
நாடியது விறுவிறுப்புடன்.
அங்கே இளித்தது பட்டை வசனம்
படித்தது வெடித்தது,
வெறுத்தது கடுகடுப்புடன்
எங்கே அந்த அண்டை சுவர்?
தேடியது அறுவெறுப்புடன்.
தெருநாய்,
சிறுநெறிகொண்ட மதிநாய்.
*********************************************
செத்துகிடந்த கழுதை பார்த்து ..... நினைத்தது
சுவரொட்டி செய்தி
இனிப்பு தடித்த வார்த்தை
இளித்து பிடித்தது காக்கை
களித்து திண்றது கழுதை
வலித்து செத்தது மறுதை
சலித்து சொன்னது கவிதை
ஜீரணமாகவில்லை
சுவரொட்டி செய்தி.
*********************************************
அப்புறமா.... இது வேற.... குமுதம்.காம்-ல ஒரு கவிஞனின் பேட்டி பார்த்து பொத்துக்கொண்டு வந்தது கோபம்....... அவரை பாராட்ட தோண்றியது....
ஒண்னு ரெண்டு கவியெழுதி
ஊறுபட்ட உரையெழுதி - எல்லாம்
இசைகுள்ள சமைஞ்சதாலே
நானும் கவிஞன்னு
நா தடிக்கும் மக்கா...!
கம்பன் முந்திய கவிராயன்கள்
காளி பாரதி கண்ண தாசன்கள்
பட்டு கோட்டை கல்யாண
சுந்தர வாலி வைர முத்துக்ள்
உருதி யேற்ற
அவர்கவி தரும்
சொற்சுவை கூட்டிக்காட்டும் பொருட்சுவை
யாதும் அற்ற
உன்கவி எனும்
நகைச்சுவை கூட்டும் சதைச்சுவை
நாத்தமடிக்குமப்பா...!
*************************************************************************************
சாவண்ணா மகேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இதுபற்றிய உங்கள் கருத்தை எனக்கு தெரிவிக்கவும்.