காக்க காக்க அகிம்சை காக்க
---------------------------------
தீயது கண்டும் வாய்பொத்தி நின்றேன்
தீயது கேளாமல் செவிபொத்தி நின்றேன்
தீயது தெரியாமல் கண்பொத்தி நின்றேன்
அகிம்சை மாகையால் அன்று
ஆகையால் இன்று
தீயது என்ற தீ அது தெருவெல்லாம் எரிய கண்டேன்
தொருவோர வெரும்புளுதி எனைப்பார்த்து நகைக்க கண்டேன்.
கதையல்ல நிசம்...
--------------
அவனை சற்று உற்றுபார்த்தேன்,
அறிவை கொஞ்சம் தட்டிப்பார்த்தேன்,
ஆர்பரிக்க மேதாவியாய் பேசிப்பார்த்தேன்,
அவன் சிந்தையை அதன்மூலம் அளந்துபார்த்தேன்,
அவன் கொண்ட கொள்கைககளை கொளுத்திப்பார்த்தேன்,
கொதிக்குமவன் குணத்தை வலிய சீண்டிப்பார்த்தேன்,
முறைக்குமவன் மூளையை மட்டம் தட்டிப்பார்த்தேன்,
கோபத்தில் குமுருமவன் குடுமி பிடித்துக் கேட்டேன்,
சிந்திக்க தெரியுமா சினங்கொண்ட சிறுவா உனக்கு ?,
சினந்து பொங்கும் அவன்மீது வாளித்தண்ணீர்போல் - பாய்ந்து
எரியும் எண்ணம் அனைத்தேன், அவனை என்னோடினைத்தேன்,
புரிந்த அவன் புன்னகைக்க சரிந்து நானும் மன்னிக்கக்கேட்டேன்,
மதிசார்ந்த நல்ல ஒரு நண்பன் கிடைத்தான்,
மரணத்திலும் மறக்கமுடியா மனிதன் கிடைத்தான்.
சினந்து பொங்கும் அவன்மீது வாளித்தண்ணீர்போல் - பாய்ந்து
எரியும் எண்ணம் அனைத்தேன், அவனை என்னோடினைத்தேன்,
புரிந்த அவன் புன்னகைக்க சரிந்து நானும் மன்னிக்கக்கேட்டேன்,
மதிசார்ந்த நல்ல ஒரு நண்பன் கிடைத்தான்,
மரணத்திலும் மறக்கமுடியா மனிதன் கிடைத்தான்.
குருந்தலை கவிதைகள்
-----------------
தாய்மொழியில் சிந்திப்பது
தாயை சந்திப்பது போல
இனிமையானது முழுமையானது.
தாயை சந்திப்பது போல
இனிமையானது முழுமையானது.
--
தேடி நிதம் சோறு தின்பதைவிட
தின்னப்படுதலே சுகமென உணர்ந்ததால்
என்னால் உண்ணப்பட காத்திருக்கிறது
என் தட்டில் உணவு.
தின்னப்படுதலே சுகமென உணர்ந்ததால்
என்னால் உண்ணப்பட காத்திருக்கிறது
என் தட்டில் உணவு.
--
தினம் பொறுத்தது போதுமென - மெதுவாக
மனம் வெறுக்கும்போது உறுமிப்பார்,
புரட்சி அன்று மண்ணில் வெடிக்கும்,
புலிக்குட்டி ஒன்று உன்னில் பிறக்கும்.
மனம் வெறுக்கும்போது உறுமிப்பார்,
புரட்சி அன்று மண்ணில் வெடிக்கும்,
புலிக்குட்டி ஒன்று உன்னில் பிறக்கும்.
--
சின்ன சின்ன சொல்லெடுத்து
சிந்தனையை கிறுகிப்பார்
உனக்கும் கவிதை வரும், காவியமும் கைகூடும்.
சிந்தனையை கிறுகிப்பார்
உனக்கும் கவிதை வரும், காவியமும் கைகூடும்.
--
மண்ணை கிளரும் மழலையைப்போல்
நோக்கமின்றி சற்று உன்னை கிளறிப்பார்
பொழுது மட்டும் அல்ல உன் பழுதும் போகும்.
நோக்கமின்றி சற்று உன்னை கிளறிப்பார்
பொழுது மட்டும் அல்ல உன் பழுதும் போகும்.