இரண்டாயிம் வருடம்
ஆண்ட பெருமையில் மறந்தோம்
இருநூறு வருடம்
பின்தங்கிய இழிநிலையை.
=====================
பரம்பரை பரம்பரையாய்
அள்ளியும் மாளவில்லை
வாழையடி வாழைகளின்
வாழ்வியல் குப்பைகளை.
=====================
இது என்ன கனவு
இப்படி வதைக்கிறதே
இருளும் மிரளும் இக்கொடூர கனவில்
ஓடிப்போக முயற்சிக்கிறேன்
அசையக்கூட முடியவில்லை
ஓலமிட முயற்சிக்கிறேன்
முனங்ககூட முடியவில்லை
ஒளிந்துகொள்ள முயற்சிக்கிறேன்
ஒரு இடத்திலும் பாதுகாப்பு இல்லை
கைநீட்டி சகாக்களை எழுப்ப நினைக்கிறேன்
அது வாய்க்கு எட்டுமளவே கட்டப்பட்டுள்ளது
மூச்சு முட்டுகிறது நான் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்
கைகொடுக்க யாருமில்லை கடைசியாய் ஒரு நினைப்பு
கனவிலிருந்து விடுபட கடைசிவழி விழிப்பு ஒன்றே
விழிக்க எத்தனித்து இமை பிரிக்க முயற்சிக்கிறேன்
அய்யகோ அதுவும் முடியவில்லை
என்ன இழவுக்கனவு இது?
அசரீரி சிரித்தது,
இது ஒரு இந்தியக் கனவு.
=====================
பெரியோர்களே தாய்மார்களே
இவனும் அவனாகிப்போனதால்
அடுத்த தேர்தலுக்கு காத்திருப்போம்
நப்பாசையிலும்
சப்பையாசையிலும்.
=====================
விம்மிய வார்த்தைகளில்
விளம்பிய கேள்விகளை
விளங்கிடா வீனர்களுக்கும்
விலங்கிடும் வீரர்களுக்கும்
விளங்குவதில்லை விதிவழி
விலங்காகிக்கொண்டிருக்கும் என்னை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இதுபற்றிய உங்கள் கருத்தை எனக்கு தெரிவிக்கவும்.