கேள்வி: நீங்கள் யார், எழுத்தாளரா, பேச்சாளரா?
பெரியார்: கருத்தாளன்.
கேள்வி: உங்கள் கொள்கை கடவுள் மறுப்பா, பார்ப்பனர் வெறுப்பா, ஆரியர் எதிர்ப்பா, சாதி ஒழிப்பா?
பெரியார்: ஆதிக்க தகர்ப்பு.
கேள்வி: உங்களில் முரண்பாடுகள் தெரிகின்றனவே?
பெரியார்: அது முரண்பட்டவர் பார்வை.
கேள்வி: தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழியா?
பெரியார்: ஆம் வயதிலும், வசதியிலும்.
கேள்வி: கடவுளை கற்பித்தவன் முட்டாளா, பரப்பியவன் அய்யோக்கியனா, வணங்குகிறவன் காட்டுமிராண்டியா?
பெரியார்: ஆம், காட்டுமிராண்டிகள் பயந்து முட்டாள்களால் கற்பிக்கப்பட்டு அய்யோக்கியர்களால் பரப்பப்பட்டதுதான் கடவுள்.
கேள்வி: நீங்கள் என்ன மகா புத்திசாலியா, அறிஞரா, ஞானியா?
பெரியார்: நாளைய காட்டுமிராண்டி.
கேள்வி: நீங்கள் உபதேசிப்பது?
பெரியார்: என் உபதேசங்களையும் அப்படியே ஏற்காதீர். சுயசிந்தனைக்கு உட்படுத்தவும்.
கேள்வி: மக்களை நெறிப்படுத்த கடவுள், மதம், சொர்க்கம், நரகம் தவிர்த்த பாதை எது?
பெரியார்: தன்மானமும் சுயசிந்தனையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இதுபற்றிய உங்கள் கருத்தை எனக்கு தெரிவிக்கவும்.