வியாழன், டிசம்பர் 25, 2008

இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துகள்...

ஆதாம் தொடங்கிய அத்துனை மனித பாவங்களையும் தனது ரத்தத்தால் கழுவியதாக கூறப்படும் எல்லாம்வல்ல இயேசுபிரான் பிறந்து இன்றோடு 2008 வருடங்கள் முடிவடைந்துவிட்டன. 2009 ம் ஆண்டிலும் அவர்தம் ரத்தத்தின் தேவை இப்பூவுலகில் நிலைபெறும் என்பதே தின்னம். மனிதன் பாவம் செய்யும் பிரானியாகவே படைக்கப்படுகிறான் அல்லது பார்க்கப்படுகிறான். கடவுளர்களின் தலையாய கடமை மன்னிப்புக்களை வாரி வழங்குவதை தவிர வேறெதுவும் இருப்பதாக எமக்கு அவர் இதுவரையிலும் தெளிவுபடுத்தியதுமில்லை. மன்னிப்பது இயேசுவுக்கு மட்டும் பிடித்த வேலையல்ல, அது அல்லாவுக்கும், அனைத்து இந்து கடவுள்களுக்கும், ஏனைய பிற உலக கடவுளர்களுக்கும் பிடித்த வேலையாகத்தான் நாம் அறிவோம்; பிடித்த வேலை என்பதைவிட எளிதான வேலை எனக்கூருவது தகும். எமது அகக்கண்ணில் இது கடவுள்களின் திறமையின்மையாகவே பிரதிபலிக்கிறது, அதுவே உண்மை. மாற்றுச்சிந்தனையில், கடவுளை நாம் அந்தலவு குறைத்து மதிப்பிடவில்லை, அதனால்தான் நாம் உறுதி செய்கிறோம் இது கடவுளின் வேலையன்றென்று.

நம்மை பொருத்தவரை, உழைத்துப் பிழைப்பவனுக்கு கடவுளும் கழுதைச்சானியும் ஒன்றே.

எமக்கு கடவுளருளிய நான்கைந்து வாய்ப்புக்களில் நாம் சிலபல நன்மைகளை கிருஸ்தவர்களாக இருப்பதால் இருப்பவர்கள் பெறக்கண்டேம். அதனடிப்படையில் நாம் கிருஸ்துவ அமைப்புகளை வாழ்த்தி வணங்குகிறேம், அவர்சேவை தொடர வழிசெய்வோம் - அதே நேரத்தில் நாமறிந்த சில வாய்கொழுப்பெடுத்த கிருஸ்தவ அமைப்புக்களுக்காக வருந்துகிறோம், வன்மையாகவும் கண்டிக்கிறோம். கிருஸ்த அமைப்புகளைப்போல், கடவுளிலிருந்து மனிதனை நேக்கி செயல்படும் சக்திகள், மற்ற மத அமைப்புக்களில் மிகவும் அறிதே என்பதும் தின்னம். இதுபற்றி சங்கராச்சாரியார்களும், தமிழக அத்வானிகளும் கவலைபட்டிருப்பின், கோவிலில் ஆடு வெட்ட தடைச்சட்டம், மதமாற்ற தடைச்சட்டம், போன்ற அவமானங்கள் அறங்கேற்றப்பட்டிருக்காது, தேவையும் இருந்திருக்காது என்பதே நமது ஆதங்கம். இனிவரும் காலங்களிலேனும் இம்மடங்களுக்கு உண்மை விளங்குமென நம்பிக்கையாக துயில்கொள்வோம்.

அதேபோல் 'சுகமளிக்கும் கூட்டங்கள் நடத்தி' பணம் கானும் தினகரபாலர்கள் பொது மருத்துவமனைகளை ஆக்கிரமிப்பார்களாக. செவிரர் பார்த்தார், குருடர் நடந்தார் என குழப்பி அய்யோக்கிதனத்தின் மூலம் ஆள் சேர்க்க நினைக்கும் இவர்தம் கருவில் எது கலந்ததாக நாம் நினைக்க?. இருப்பினும் அவர்தம் உரையில் அவ்வப்போது நன்னெறிகளை நான்கெளுத்தும் படிக்காத எம் சொந்தக்களுக்கு சொல்லிக்கொடுத்தால் அவர்தம் ஆத்மாக்கள் அமைதி பெருமாக.

இப்படியாக எம்முள் கொதிக்கும் பல முரண்பட்ட சிந்தனைகளோடு இந்தவருட கிருஸ்துமஸ் வழிபாட்டிலும் குடும்பத்துடன் கலந்துகொண்டோம், அங்கேயும் ஆண்டவனிடம் பலர் தன்மானமற்று பெருமையுடன் பிச்சையெடுக்க கண்டோம்...

நெஞ்சு பொருக்கிதில்லையே...
என்று தனியும் இந்த தாகம்....

போன்ற பாரதியின் பாடல்கள் 'customized remix'-ஆக நம் மண்டைக்குள் ஒலிக்க, அங்கேயும் வாழ்த்தியதைபோல் உங்களுக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துகளை கூறி விடைபெறுகிறோம்...

இயேசு. தனது பிறந்த நாளான இன்று உருதியேற்று உங்களையும், உலகத்தையும் காப்பாராக!

--
சாவண்ணா மகேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுபற்றிய உங்கள் கருத்தை எனக்கு தெரிவிக்கவும்.