புலம்பலை நிறுத்தடா புத்திகெட்டவனே
பாலகன் கொல்லப்பட்டது புதுச்செய்தி அல்லவே...
கருவறுக்க காடையன் கதவருகே வரும்வரை
கயமை தோழமையோடு கண்பொத்தி நின்றவனே..
நிறுத்தடா உன் ஓலத்தை
துடையடா உன் கண்ணீரை
முன்னோர் பகை தீர்க்க
மூன்றாவது ஆள் எதற்கு?
மூளையை சலவை செய்
திடந்தோளை திடமாக்கு
திமிரும் உணர்வை உரமாக்கு
இதயத்தை இன்னும் ஈரமாக்கு
தகப்பனிடம் ஆசிபெறு
தாயிடம் மன்னிப்பு கேள்
கடைசியாய் காதலியை பார்
கருவி அல்ல காகிதம் ஏந்து
புதிய ரௌத்திரம் பழகு
மொழிகாக்க அவ்வழிவந்த இனம்காக்க
புது யுத்தம் புகு, புது உலகு படை
உன் பிறப்பை பூர்த்திசெய்...!