கோடையிலேயே உழுதுபோட்டு
கொளுத்தும் வெயிலில் காயப்போட்டு
மழைக்குமுன்னே விதைவிதைத்து
முளைத்தபின்னே களையெடுத்து
பொழுதுவிடிஞ்சா வானம்பார்த்து
பொழுதுமுழுக்க பூமிபார்த்து
வேலைபார்த்து வேவுபார்த்து
வேலியடைச்சு வெளையவச்சு
கதிரறுத்து களம்சேர்த்து
காற்றுள்ளபோதே தூற்றிச்சேர்த்து
கடைசிபயலும் கல்லூரிபடிக்க - அப்பா
கனமான நெல்லெல்லாம் கடைக்கனுப்ப - அம்மா
கருக்காயை வீடுசேர்த்தாள் உணவுக்காக.
-------------------------------------------------------------------
மொட்டாகி பூவாகி
காயாகி கனியாகி
விதையாகி மண்ணில் விழுந்து
உயிராகி பயிராகி
வேராகி மரமாகி
சிலது பழுக்கும்
சிலது கொழுக்கும்
இயற்கை அதைக்கண்டு சிரிக்கும்
இருந்தும் மீண்டும் வளர்க்கும்
மொட்டாகி பூவாகி
-------------------------------------------------------------------
அவனுக்கு அடங்கா அறிவாளிகளே
மனச்சுமையை இறக்கிவைக்க இடமிள்ளாதவர்களே
மனம் ஒடுக்கி மந்திரனவன் முன்
தினம் மந்தியென இருந்து பாரும்
அவன்னில்லையெனவும் தெரியும்
அவனின் நிலைத்தன்மையும் புரியும்.
-------------------------------------------------------------------
சொல்லாத சோகம்,
வெல்லாத மோகம்,
கொல்லாத காதல்,
பொல்லாத பாவம்,
கொள்ளாத வீரம்,
தள்ளாத நட்பு,
இல்லாத கூடு எது, ஏது...?
-------------------------------------------------------------------
Assume your role
Aggregate your thoughts
Arrange your words
Ascend your statements
Articulate your message
Assert your opinion
Amuse your crowd
Amaze your audience
Argue your case
Achieve your goal
Archive it in history.
-------------------------------------------------------------------
தாய் தந்த மொழி காக்க
மொழி தந்த குணம் காக்க
குணம் தந்த இனம் காக்க
இனம் வாழும் நிலம் காக்க
மொழி தந்த குணம் காக்க
குணம் தந்த இனம் காக்க
இனம் வாழும் நிலம் காக்க
நிலம் வாழும் உயிர்கள் காக்க
உயிர்கள் பேணும் உரிமை காக்க
உரிமை காணும் சந்ததி காக்க
சந்ததி கற்கும் சமத்துவம் காக்க
சமத்துவம் தரும் சமாதனம் காக்க
சமாதனம் கொணரும் சந்தர்ப்பம் காக்க
சந்தர்ப்பம் வகுக்கும் சாதனை படைக்க
சாதனை மூலம் உலகில் வேதனை துடைக்க
வாருங்கள் தோழர்களே,
அணிதிரள்வோம் அமைதிகாப்போம்
வழியமைப்போம் வாகைசூடுவோம்
ஆட்சியமைப்போம் ஆவனசெய்வோம்..!
கருவறையை கழுவுதலும்
கழிவறையை கழுவுதலும்
பொதுமக்கள் வாழ்வை பேணும்
புனிதமான செயல் எனக்கொள்வோம்...
----------------------------------------------------
திட்டுவதற்கு பயப்படகூடாது, அது கடமை,
திட்டுவதிலேயே சுகப்படக்கூடாது, அது மடமை,
திட்டியபின் பயந்துசாகக்கூடாது, அது கொடுமை,
திட்டத்தெரியாமல் திட்டக்கூடாது, அது புலமை,
திட்டினால் திமிரக்கூடாது, அது பழமை,
திட்டுவாங்க சளைக்கக்கூடாது, அது புதுமை,
திட்டுவாங்கியே பொளைக்கக்கூடாது, அது கயமை,
திட்டியபின்னும் திருடக்கூடாது, அது முடமை,
திட்டியே தீர்ந்துபோகக்கூடாது, அது வெறுமை,
திட்டித்திட்டியே திருத்தக்கூடாது, அது பகைமை,
திட்டத்திட்ட ஒதுங்கக்கூடாது, அது சுயமை,
திட்டத்திட்ட ஒடுங்கக்கூடாது, அது கோழைமை,
திட்டுவது திருத்துவதுக்கு, உம்மை தீட்டுவதற்கு...
திட்டுவது வன்முறையல்லவோய், நன்முறை...
வாருங்கள் தோழர்களே,
வரிந்துகட்டிக்கொண்டு திட்டிக்கொள்வோம்,
மாறிமாறி தீட்டிகொள்வோம்...
வன்செயல் அறுக்க, நன்செயல் செதுக்க.