திங்கள், டிசம்பர் 13, 2010

அடுத்து என்ன செய்ய ....?

வீரம் மட்டுமல்ல விவேகமும் பேசுங்கள் உறவுகளே ...

நாம் கத்தியை தீட்ட தீட்ட எதிரி புத்தியை தீட்டுகிறான்,
தன் சக்தியை கூட்டுகிறான்..
அவன்  தன் உக்தியை மாற்றுகிறான் ...

கவனிக்க...
ஆம்,  கருவி உருவுவோம், கருவி உருவுவோம்
மக்கள் நலன் கருதி உருவுவோம்..

ஓங்கி அடிப்போம் எதிரி தலையில்
சம்மட்டியாலும், சமபுத்தியாலும் ...!

நம்செயலில் நிசமிருப்பதுபோல்
நியாயம் இருக்க செய்வோம் ...

ஆகையால்,
நிர்வாணமாக்கப்பட்ட நமக்கு தேவை நிதானம் ...
நிர்மூலமாக்கப்பட்ட நாக்கு தேவை நிதி மூலம் ...
வன்னிமண்ணில் நமக்கு தேவை தமிழ் வாண்டுகள்..
புத்தம் புதிய புலிக்குபிறக்கும் பூண்டுகள்..
இருபதாண்டுகளில் தேவை இரண்டு லட்சம் வேங்கைகள்..
வழிநடத்த, வணிகம் செய்ய, வரைமுறை படைக்க..

பெறுவோம் தெருவெங்கும் பிள்ளைகள் பத்து...
தேடுவோம் உலகெங்கும் அவைகளுக்கு சொத்து..
தருவோம் அவைகளுக்கு உணர்வும் ஊக்கமும்...

அடுத்து..
நாம் முடுக்க வேண்டியது ஈழத்தில் மூலதனம்...
நம் முடக்க வேண்டியது காடையரின் மூளைத்தனம்..
பத்தாண்டுகளில் பாதி வணிகம் ஈழத்தமிழன் தமிழன் கையில்...
பாதி  இலங்கை சொத்து உலகத்தமிழன் தமிழன் பையில்..
முடியாத வேங்கைகளை வளர்த்த வெளிநாடுவாழ் தமிழனுக்கு..?

அறுபது ஆண்டுகளில் கிட்டாத சுதந்திரம்,
இருபது ஆண்டுகளில் கிட்டும்,
புலிக்கொடி மீண்டும் பறக்கும்..
புலிக்கொடி மீண்டும் பறக்கும்..
புலிக்கொடி மீண்டும் பறக்கும்..

1 கருத்து:

  1. சிந்திக்கதூண்டும் வரிகள்... என்றும் என் அன்பிற்கினிய சகோதரரே வாழ்த்துக்கள்... அனுதாப அலையில் ஆதரவு தேட எம் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவன் பிரபாகரன் ஒன்றும் கோழை அல்ல மானங்கெட்ட ஆட்சி நடத்தும் கயவர்களின் தலைவன் கருணாநிதியை போல்... சூல்சியால் தான் இந்த வீழ்ச்சி ஆனால் இனி எழபோகும் எழுச்சி என்பது எண்ணற்ற எம் தமிழ் நெஞ்சங்களுக்கு மகிழ்ச்சி என்பதை எதிவரும் காலம் உணர்த்தட்டும்.. பொங்கி ஏழு உணர்வுள்ள தமிழ் இனமே நமக்கான தமிழீழம் படைப்பதற்கு... தலைவன் வருவான் முடிவை தருவான் காலம் கனியும் வரை காத்திரு தமிழ் சொந்தமே நிச்சயம் மலரும் எமக்கான தமிழீழம் விரைவில் புலிக்கொடி மீண்டும் பறக்கும் எமது சொந்த தேசத்தில்.

    பதிலளிநீக்கு

இதுபற்றிய உங்கள் கருத்தை எனக்கு தெரிவிக்கவும்.